மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீலகிரி
கோத்தகிரி,
200 யூனிட்டுக்கு மேல் 2 மாதங்களுக்கு ரூ27.50, 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ரூ.72.50 என மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்து உள்ளது. இதை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், கோத்தகிரி அருகே நெடுகுளா மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். தொடர்ந்து மாநில அரசு மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு மின்வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை செயற்பொறியாளரிடம் அளித்தனர்.
Related Tags :
Next Story