மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கட்டிடங்களை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கூடலூர்,
கூடலூரில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நடுக்கூடலூரில் விரிசல் ஏற்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தியும் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு செயலாளர் சி.கே.மணி தலைமை தாங்கினார். நிர்வாகி தங்கராஜ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மாவட்டக் குழு உறுப்பினர் வாசு, காங்கிரஸ் நிர்வாகி சளிவயல் ஷாஜி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சகாதேவன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கூறும்போது, அரசு நிலத்தில் கட்டப்படும் கட்டிடங்களை வருவாய்த்துறையினர் இடிக்கின்றனர். இது கண்டனத்துக்கு உரியது. மேலும் மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்களை ஆர்.டி.ஓ. அவமானப்படுத்தி வருகிறார். இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்றனர்.