மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீமுஷ்ணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்
ஸ்ரீமுஷ்ணம்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் தேன்மொழி தலைமை தாங்கினார். வட்டக் குழு உறுப்பினர் வெற்றிவீரன் முன்னிலை வகித்தார். குணமங்கலம் கிராமத்தில் பொதுமக்கள், வீட்டுமனை பட்டா கேட்டு போராடி வருகின்றனர். அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க தாசில்தார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அவரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ், கிளை செயலாளர்கள் தங்கசாமி, ராமு, சுப்பிரமணியன் மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் மஞ்சுளா, வளர்மதி, காந்தாமணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story