மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
வந்தவாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்டார செயலாளர் அ.அப்துல்காதர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் மா.சிவகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.செல்வன் மற்றும் பெ.அரிதாசு, ந.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், தீபாவளி, பொங்கல் சீட்டு கட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை திரும்ப பெற்றுத்தர கோரி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு வந்த வந்தவாசி தாசில்தார் முருகானந்தம் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
Related Tags :
Next Story