மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தமிழக கவர்னரை திரும்பபெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு தமிழக கவர்னரை திரும்ப பெறக்ேகாரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அதன் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவிச்சந்திரன், நகர பொறுப்பாளர் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில், தமிழக மக்களின் உரிமைகள், மரபுகளுக்கு எதிராகவும், அரசியலமைப்பு சட்டத்தினை மதிக்காமல் செயல்படும் தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பபட்டன. இதில் நிர்வாகிகள் மேகநாதன், கலைச்செல்வி, கேசவன், அசோகன், கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story