மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்த மேல்நிலை குடிநீர் தொட்டியில் கடந்த டிசம்பர் 25-ந்தேதி மனிதக்கழிவுகள் கலக்கப்பட்டிருந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தை கண்டித்து திருவையாறு பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பக்கிரிசாமி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story