மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தாலுகா செயலாளர் சிவா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் காசிநாதன் துரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன், தாலுகா குழு உறுப்பினர்கள் மணிகண்டன், ஜேம்ஸ்ஜஸ்டின், ராமச்சந்திர பாபு, ஞானசேகர், முன்னாள் கவுன்சிலர் வெங்கடேஸ்வரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ராமேசுவரம் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டு உள்ள தடுப்பு கம்பிகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


Related Tags :
Next Story