மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

திருக்கடையூர் அருகே ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மார்க்ஸ் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசினார்.ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர்காக்கும் மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும். சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை தேவைக்கு ஏற்ப நியமனம் செய்ய வேண்டும். சுகாதார நிலைய வளாகத்தில் ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும். இரவு நேர காவலரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Next Story