மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகப்பட்டினம்


காரல் மார்க்சின் சிந்தனைகளை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அவதூறாக பேசியதாகவும், அதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாகை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழக கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். நாகைமாலி எம்.எல்.ஏ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.


Next Story