மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஏரலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
ஏரல்:
ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில், மக்களை பாதிக்கும் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஏரல் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய குழு உறுப்பினர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுவாமிதாஸ், இ.கருப்பசாமி, பொன்ராஜ், எஸ்.கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் நம்பிராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story