மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திரிபுரா மாநிலத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் மீதும், அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்திய பா.ஜ.க.வினரை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆண்டிமடம் வட்ட செயலாளர் வி.பரமசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு மணிவேல், மாவட்டக்குழு உறுப்பினர் அருணாச்சலம், சங்குபாலன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், அழகாபுரம்- ஓலையூர் சாலை வசதி, இடையக்குறிச்சி சாலை வசதி, அய்யூர் -வல்லம் சாலை வசதி, கொடுக்கூர் - பொன்பரப்பி சாலை வசதி ஆகியவற்றை வலியுறுத்தியும், கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளுக்கு பணபாக்கியை பட்டுவாடா செய்ய வேண்டும், ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பழைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் கோஷங்களை எழுப்பினர். முடிவில் கிளைச் செயலாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.