மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்


மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
x

வேலூரில் மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். வேலூர் வடக்கு செயலாளர் பாண்டுரங்கன், காட்பாடி செயலாளர் சுடரொளியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், அல்லேரி மலையில் பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்தாள். மருத்துவ வசதியின்றி மலைவாழ்மக்களின் மரணங்கள் தொடரக்கூடாது என்று கோரிக்கை வைத்தனர். மேலும் அங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட வேண்டும். சாலை வசதி இல்லாத மலைவாழ் கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

அத்திமரத்துகொல்லை உண்டு உறைவிடப்பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story