சேரன்மாதேவியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்


சேரன்மாதேவியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
x

சேரன்மாதேவியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்தவர் பல்வீர் சிங். குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களின் பற்களை கொடூரமாக பிடுங்கியதாக இவர் மீது எழுந்த குற்றச்சாட்டை அடுத்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் மனித உரிமையை மீறியதாக, இவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பஸ்நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் அருள் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ஸ்ரீ ராம் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் பெருமாள், நாங்குநேரி ஒன்றிய செயலாளர் வக்கீல் முருகன், பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் மாரிசெல்வம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பத்தமடை ராஜன், பக்கீர் மைதீன், மாதர் சங்க நிர்வாகிகள் சந்திரா, மாலதி, ஜெயந்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையொட்டி சேரன்மாதேவி துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story