மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உறுதிமொழி


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உறுதிமொழி
x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

விருதுநகர்

தமிழ்நாடு அமைப்பு தினத்தையொட்டி விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தியும், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்கிடவும் உறுதிமொழி பிரசார கூட்டம் நடத்தினர். பழைய பஸ் நிலையம் அருகில் இருந்து பேரணியாக சென்று தமிழ்நாடு பெயர் வைக்க போராடிய தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம் முன்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நகர மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்அர்ஜுனன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Next Story