மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு  கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

சுரண்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது

தென்காசி

சுரண்டை:

சுரண்டை நகராட்சி பகுதியில் சொத்து வரி உயர்வை ரத்து செய்யக்கோரி கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பீடித்தொழிலாளர் சங்க தலைவர் பொட்டு செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வேல்முருகன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட பீடி சங்க நிர்வாகிகள் மகாவிஷ்ணு, ஆரியமுல்லை, கற்பகவல்லி, தர்மகனி, ஐயாதுரை, குருசாமி, ஒன்றிய பீடி சங்க பொருளாளர் கருப்பசாமி, கட்டுமான சங்க பொருளாளர் சந்திரசேகர ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் சுந்தரமூர்த்தி, அண்ணாதுரை, முருகேசன், மாடசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story