கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மாசி மக விழா
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மாசி மக விழா நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகன்நாயகி அம்பாள் சமேத பிரகதீஸ்வரர் கோவிலில் மாசி மக பிரமோத்சவ விழா நேற்று விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. இன்று 24ந் தேதி கணக்க விநாயகர் அபிஷேகம் வாஸ்து சாந்தி ஹோமம் அங்குரார்ப்பணம் ஆகியவை நடைபெற உள்ளன. நாளை சனிக்கிழமை முதல் நாள் காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கொடியேற்றமும் யாகசாலை பூஜைகள் ஆரம்பம் ஆகின்றன இரண்டாம் நாள் 26-ந்தேதி முதல் வரும் மார்ச் இரண்டாம் தேதி வரை தொடர்ந்து யாக பூஜைகள் மதியம் அபிஷேகம் மாலை சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளன. 4-ந்தேதி வரை சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. 5-ந்தேதி காலை 10 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் மாலை தேரில் இருந்து சுவாமி கோவிலுக்குள் வருதல் போன்ற நிகழ்வும் 6-ந்தேதி மாசி மகம் காலை 12 மணியளவில் சூர்னோத்சவம், தீர்த்தவாரி, யாகசாலை கலசங்கள் அபிஷேகம், மாலை சுவாமி திருவிதி உலாவும், கொடி இறக்கமும் நடைபெற உள்ளது. 7 -ந்தேதி செவ்வாய்க்கிழமை அன்று 11ம் நாள் அம்பாள் உற்சவம் சண்டிகேஸ்வரர் உற்சவம் ப்ராய சித்தா அபிஷேகம் யதார்த்தனா பிரவேசம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கங்கைகொண்ட சோழபுரம் கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகராஜ் செயல் அலுவலர் செந்தமிழ் செல்வி மற்றும் ஊர் பொதுமக்கள் கங்கைகொண்ட சோழீஸ்வரர் மாசி மக விழா குழுவினர் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுவினர், வார வழிபாட்டு குழுவினர், ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர்.