மாணவர்களுக்கு முக கவசம், நோட்டுகள்
அணுக்குமலை தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு முக கவசம், நோட்டுகள்
திருவண்ணாமலை
வேட்டவலம்
வேட்டவலத்தை அடுத்த அணுக்குமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் செந்தில்குமரன் தலைமையில் மாணவர்களுக்கு முக கவசம், இரண்டு வரி, நான்கு வரி நோட்டுகள், வாய்ப்பாடு, நோட்டுகள், கரும் பலகைகள் (சிலேட்டு) வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் வேட்டவலம் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடாஜலம் பங்கேற்று மாணவர்களுக்கு மேற்கண்ட பொருட்களை வழங்கினார்.
பின்னர் எண்ணும் எழுத்து செயல்படும் விதத்தையும் மாணவர்கள் கூற கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் ஆறுமுகம், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் உதவி ஆசிரியர் ஆனந்தி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story