விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை
விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர்
கீழப்பழுவூர்:
தஞ்சை மாவட்டம், வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் கோபால்(வயது 33). கொத்தனார். இவர் அரியலூர் மாவட்டம், மேலகாங்கியனூர் கிராமத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து, தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தார். இவர் சம்பவத்தன்று மது போதையில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கோபால் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story