மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த கொத்தனார் சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த கொத்தனார் சாவு
x

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த கொத்தனார் இறந்தார்.

புதுக்கோட்டை

கீரனூர் அடுத்துள்ள குளத்தூரை சேர்ந்தவர்கள் பாஸ்கர் (வயது 48), ரவிக்குமார் (47). கொத்தனார்களான இவர்கள் சம்பவத்தன்று நார்த்தாமலையிலிருந்து இரவு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை ரவிக்குமார் ஓட்டினார். அப்போது சாலையோரம் குவிக்கப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் கீழே விழுந்த 2 பேரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பாஸ்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ரவிக்குமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story