விபத்தில் கொத்தனார் சாவு


விபத்தில் கொத்தனார் சாவு
x

விபத்தில் சிக்கிய கொத்தனார் உயிரிழந்தார்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ள கீழத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சிவகுமார்(வயது 33). கொத்தனாரான இவர் சொந்த வேலையாக கல்லாத்தூர் சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் கடுவந்தோண்டி கிராமத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

கீழக்குடியிருப்பு பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது சிவகுமாரின் மோட்டார் சைக்கிளும், எதிரே இறவாங்குடி கிராமம் மெயின்ரோட்டு தெருவை சேர்ந்த ரத்தினசாமி மகன் நிஷாந்த் (22) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார், சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து சிவகுமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த சிவகுமாருக்கு இலக்கியா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சிக்கிய கொத்தனார் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story