தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை
தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கிருஷ்ணாபுரம் செட்டி மண்டபம் புதுத் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது33). கொத்தனார். இவருடைய மனைவி கீர்த்தனா (23). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது கீர்த்தனா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இருவரும் பாபநாசத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜசேகர் வீட்டில் உள்பக்க கதவை பூட்டிக் கொண்டு கைலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய மனைவி கீர்த்தனா கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மகாலட்சுமி, ஏட்டு காளிதாஸ் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story