நந்திநாதேஸ்வரர் கோவிலில் மாசித்திருவிழா
நாகை அருகே நந்திநாதேஸ்வரர் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகப்பட்டினம்
நாகை அருகே வடக்குப்பொய்கை நல்லூரில் உள்ள நந்திநாதேஸ்வரர் கோவிலில் மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவக்கிரக, மகாலட்சுமி ஹோமங்கள், மகாபூர்ணாகுதி பூஜை ஆகியவை நடந்தது. இதைத்தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. விழாவில் சவுந்தரநாயகி அம்மன், நந்திநாதேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கொடி ஊர்வலம் நடைபெற்று, கொடியேற்றப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா நாட்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அஸ்திரதேவர்கள் தீர்த்தவாரி வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) கல்லார் கடலில் நடக்கிறது.
Related Tags :
Next Story