தலையில் கல்லைப்போட்டு விவசாயி படுகொலை


தலையில் கல்லைப்போட்டு விவசாயி படுகொலை
x

ஓசூர் அருகே தலையில் கல்லைப்போட்டு விவசாயி படுகொலை செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் அருகே தலையில் கல்லைப்போட்டு விவசாயி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

விவசாயி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரிகையை அடுத்த கடத்தூரை சேர்ந்தவர் திப்பையா (வயது 42). விவசாயி. இவருடைய மனைவி துளசியம்மா. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு தனது விளை நிலத்தில் காவலுக்காக திப்பையா சென்றார்.

இந்தநிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை தேடி குடும்பத்தினர் தோட்டத்துக்கு சென்றனர். அப்போது புதுக்குட்டையில் அரசு புறம்போக்கு நிலத்தில் தலையில் கல்லை போட்டு முகம் சிதைக்கப்பட்ட நிலையில் திப்பையா கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

போலீஸ் விசாரணை

மேலும் அவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் அருகிலேயே கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த திப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திப்பையா சொத்து பிரச்சினை காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

பேரிகை அருகே விவசாயி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story