தர்மபுரியில் மாவட்ட டேக்வாண்டோ போட்டி-350 மாணவ-மாணவிகள் பங்கேற்பு
தர்மபுரி
தர்மபுரி:
தரமபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி தர்மபுரியில் உள்ள மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் மாவட்டத்தில் உள்ள 53 பள்ளிகளில் இருந்து சுமார் 350-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டியை முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர் தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லளிகம் அரசு மேல்நிலை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சாக்ரடீஸ் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் உடற்கல்வி இயக்குனர் சங்கர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story