மாவடிப்பண்ணை ஸ்ரீசக்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மாவடிப்பண்ணை ஸ்ரீசக்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தூத்துக்குடி
தென்திருப்பேரை:
மாவடிபண்ணையில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி அம்மன் கோவிலில் புதிதாக விமான கோபுரம், மூலஸ்தானம், கட்டிடங்கள் கட்டப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, கும்ப பூஜை, வேத பாராயணம், லட்சுமி ஹோமம், சுதர்சனை ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இரவு கங்கை தீர்த்தம், பொதிகை தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்கள் எடுத்து வரப்பட்டது. நேற்று அதிகாலையில் விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக பூஜைக்கு பின்னர் கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் ஸ்ரீ சக்தி அம்மன் விமான கோபுரம், மூலஸ்தானம், நூதன கோவில் சம்ரோசன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story