மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவில் ஆவணி கொடைவிழா தொடங்கியது


மாவடிபண்ணை  முத்தாரம்மன் கோவில்   ஆவணி கொடைவிழா தொடங்கியது
x

மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவில் ஆவணி கொடைவிழா கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

மாவடிப்பண்ணை முத்தாரம்மன் கோவில் ஆவணி கொடைவிழா நேற்று கால்நாட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு, அம்பாளுக்கு காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 7.45 மணிக்கு கால்நாட்டு விழா ஆரம்பமானது. காலை 8.10 மணிக்கு கோவில் முன்பு பூஜைகள் செய்து கால் நாட்டப்பட்டது. விழா நாட்களில் தினமும் அம்பாளுக்கு காலை, மாலையில் சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெறும். வருகிற 11-ந் தேதி வில்லிசையுடன் விழா தொடங்கி, விழாவின் சிகர நிகழ்சியாக வருகிற 13-ந்தேதி காலை 8 மணிக்கு பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும், மதியம் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இரவு 8 மணிக்கு அம்மனுக்கு முளைப்பாரி எடுத்தல், கரகாட்டம் நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு வானவேடிக்கை மற்றும் அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதிஉலா நடைபெறும். வருகிற 14-ந் தேதி அம்மனுக்கு பொங்கலிடுதல் மற்றும் தீர்த்தவாரி நடைபெறுகிறது.


Next Story