விழுப்புரத்தில்மே தின விழா பேரணி


விழுப்புரத்தில்மே தின விழா பேரணி
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் மே தின விழா பேரணி நடைபெற்றது.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்ட விஸ்வகர்மா தச்சு தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மே தின விழா மற்றும் பேரணி, சங்கத்தின் 26-ம் ஆண்டு விழா நடைபெற்றது.

விழுப்புரம் ரெயில் நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணிக்கு மாவட்ட செயலாளர் ராமானுஜம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஞானவேல், துணைச் செயலாளர்கள் வேலாயுதம், ஜெயக்குமார், ஆலோசகர் நாகராஜன், நகரத் தலைவர் பழனி, செயலாளர் கணேசன், பொருளாளர் ரவி, நகர துணைத் தலைவர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணியை விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தொடங்கி வைத்தார். இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று விழுப்புரம் கே.கே. சாலையில் உள்ள கே.சி.பி. திருமண மண்டபத்தை சென்றடைந்தது.

தொடர்ந்து அங்கு நடந்த விழாவிற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் முருகேசன், செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ராமானுஜம் வரவேற்றார். லட்சுமணன் எம்.எல். ஏ., முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

விழாவில், தச்சு தொழில் செய்ய நவீன மர இழைப்பகத்திற்கு முறையான உரிமம் வழங்க வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் விஸ்வகர்மா ஜெயந்திக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும், விஸ்வகர்மா இனத்தவரை பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பன போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இவ்விழாவில் தமிழ்நாடு கருமார் தச்சு கூட்டமைப்பு சங்க மாநிலத் தலைவர் அப்பர் லட்சுமணன், கைவினைஞர் முன்னேற்ற கட்சி மாநில தலைவர் பாலு, மாநில பொதுச் செயலாளர் பொன் கனகராஜ், அமைப்பு செயலாளர் உமாபதி, வக்கீல் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.


Next Story