கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்


கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டியில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

பண்ருட்டி களத்துமேட்டை சேர்ந்தவர் கணேசன்(வயது 41). இவருடைய மகள் அஸ்வினி(20). இவர் கடலூரில் உள்ள கே.என்.சி. கல்லூரியில் பி.காம். இறுதி ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று காலை கல்லூரிக்கு சென்ற அஸ்வினி திரும்ப அவர் வீட்டிற்கு வரவில்லை. அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து கணேசன் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்வினியை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story