எரிவாயு மயானத்தை மேயர் ஆய்வு


எரிவாயு மயானத்தை மேயர் ஆய்வு
x

திண்டுக்கல் வேடப்பட்டியில் உள்ள எரிவாயு மயானத்தை மேயர் இளமதி ஆய்வு செய்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் ஆர்.எம்.காலனியில் ஒரு மின்மயானமும், வேடப்பட்டியில் எரிவாயு மயானமும் உள்ளது. இதில் ஆர்.எம்.காலனியில் உள்ள மின்மயானம் மட்டுமே தற்போது வரை செயல்பாட்டில் உள்ளது. எரிவாயு மயானம் முறையான பராமரிப்பு இல்லாததால் கட்டிடங்கள் சிதிலமடைந்து விட்டது. இதனால் தற்போது எரிவாயு மயானம் செயல்பாட்டில் இல்லை. கொரோனா காலத்தில் இந்த எரிவாயு மயானம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு உடல்கள் எரியூட்டப்பட்டன. அதன்பிறகு இந்த மயானத்தை பயன்படுத்துவது குறைந்து போனது.

இந்த நிலையில் செயல்படாமல் உள்ள எரிவாயு மயானத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று சந்தைரோடு வியாபாரிகள் சங்க தலைவர் நடராஜன், செயலாளர் வீரபாண்டி ஆகியோர் பொதுமக்கள் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாநகராட்சி மேயர் இளமதி நேற்று வேடப்பட்டி எரிவாயு மயானத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மயான கட்டிடங்களின் நிலை, காத்திருப்போர் அறை, உடல்களை எரியூட்டும் மேடை ஆகியவற்றின் உறுதி தன்மை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் சேதமடைந்த கட்டிடங்களை சீரமைப்பது, எரிவாயு மயானத்தை மின்மயானமாக மாற்றுவது தொடர்பான திட்ட மதிப்பீட்டை தயாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வேடப்பட்டி எரிவாயு மயானத்தை சீரமைத்து விரைவில் மின்மயானமாக மாற்றப்படும் என்றனர். ஆய்வின் போது மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜோதிபாசு, காயத்ரி ஜெயவீரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story