எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் பறிமுதல்
எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
நீலகிரி
கூடலூர்
கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரன் மற்றும் போலீசார் கூடலூர் கல்குவாரி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். இதில் தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் 3 கிராம் வைத்திருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.5 ஆயிரம் இருக்கும். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பாடந்தொரையை சேர்ந்த சத்யா (வயது 22) என்பதும், பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story