ம.தி.மு.க. பொதுக்கூட்டம்


ம.தி.மு.க. பொதுக்கூட்டம்
x

ம.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு விளக்க பொதுக்கூட்டம் வெள்ளைக்கோட்டை அண்ணாத்திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பந்தல்குடி மாரியம்மன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் கண்ணன், சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன், மாவட்ட துணைச்செயலாளர்கள் நாகராஜன், மணிவண்ணன் ஆகிேயார் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் தாமோதரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், தலைமை கழக பேச்சாளர்கள் கனல் காசிநாதன், பாண்டுரங்கன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் மாவட்ட துணைச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, சாத்தூர் ஒன்றிய ம.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வடக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.


Next Story