கால்நடைகளுக்கான அம்மை நோய் தடுப்பூசி முகாம்


கால்நடைகளுக்கான அம்மை நோய் தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 2 Sept 2023 12:15 AM IST (Updated: 2 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஜாம்புவானோடை ஊராட்சியில் கால்நடைகளுக்கான அம்மை நோய் தடுப்பூசி முகாம்

திருவாரூர்

தில்லைவிளாகம்:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை ஊராட்சிக்கு உட்பட்ட வீரன்வயல், வடகாடு, கல்லடி கொல் லை, அம்பட்டன்கொல்லை, மேலக்காடு, தெற்குகாடு, தண்டாங்கொல்லை உள்ளிட்ட இடங்களில் கால்நடைகளுக்கான அம்மை நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன், துணைத் தலைவர் ராமஜெயம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முத்துப்பேட்டை கால்நடை டாக்டர் மகேந்திரன் தலைமையில் 10 பேரை கொண்ட குழுவினர் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டனர்.


Next Story