போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சீராக பயணிக்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு, தலைமை செயலாளர் உத்தரவு


போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சீராக பயணிக்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு, தலைமை செயலாளர் உத்தரவு
x

சென்னையில் மழை காலங்களில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சீராக பயணிக்க நடவடிக்கை அதிகாரிகளுக்கு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் குறித்து 2-வது கட்ட ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நேற்று நடந்தது. இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அதிகாரிகள் மத்தியில், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேசியதாவது:-

சாலைப்பணிகளை கண்காணிக்க திட்ட மேலாண்மை ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆற்காடு சாலையை உடனடியாக செப்பனிட்டு, போக்குவரத்து போலீசார் பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் எளிதாக வாகனங்கள் செல்ல வழிவகை செய்யவேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனங்களால் ஏற்பட்டுள்ள சாலை வெட்டுகள், சீரமைப்பு பணிகளை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் உரிய நேரத்தில் முடித்து மழை காலங்களில் வாகனங்கள் எந்த போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் சீராக பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story