நத்தம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் இறைச்சி கடை ஊழியர் சாவு


நத்தம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் இறைச்சி கடை ஊழியர் சாவு
x
தினத்தந்தி 19 Jan 2023 12:54 AM IST (Updated: 19 Jan 2023 12:03 PM IST)
t-max-icont-min-icon

நத்தம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் இறைச்சி கடை ஊழியர் இறந்தார்.

திண்டுக்கல்

நத்தம் அருகே செந்துறை மாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 34). இவர், திருப்பூரில் உள்ள இறைச்சி கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் சொந்த ஊருக்கு வந்திருந்த தங்கவேல், சம்பவத்தன்று தனது நண்பர்களை பார்ப்பதற்காக பக்கத்து கிராமமான பெரியூர்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் மாமரத்துப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி தங்கவேல் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தங்கவேல் உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story