இறைச்சி கழிவுகள்


இறைச்சி கழிவுகள்
x

தஞ்சை கீழவாசல் பகுதியில் சாலையோரத்தில் இறைச்சி கழிவுகள் குவிந்து கிடக்கிறது, குப்பைகளுக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சை கீழவாசல் பகுதியில் சாலையோரத்தில் இறைச்சி கழிவுகள் குவிந்து கிடக்கிறது, குப்பைகளுக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கீழவாசல் பகுதி

தஞ்சை கீழவாசல் பகுதியில் குறிச்சித்தெரு-கொடிக்காலூர் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கீழவாசலில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி இந்த சாலை வழியாக அதிகளவில் மாணவ-மாணவிகள் வருகின்றனர். மேலும், கீழவாசல் உள்ளிட்ட தஞ்சை நகர் பகுதிக்கு வேலைக்கு வருபவர்களின் முக்கிய வழிப்பாதையாக குறிச்சித்தெரு-கொடிக்காலூர் சாலை உள்ளது. இந்த நிலையில் குறிச்சித்தெரு-கொடிக்காலூர் சாலையோரத்தில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகின்றன. இதனால் சாலை பகுதி குப்பை கிடங்கு போல பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இறைச்சி கழிவுகள்

ஒருசிலர் இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து குறிச்சித்தெரு-கொடிக்காலூர் சாலையோரத்தில் கொட்டி செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகளை தின்பதற்காக கால்நடைகளும் அதிகளவில் வருகின்றனர்.அதுட்டுமின்றி குவிந்து கிடக்கும் குப்பகைளை மர்மநபர்கள் தீ வைத்து எரித்து செல்கின்றனர்.

அதிலிருந்து வெளியேறும் புகை சாலை பகுதியை சூழ்ந்து கொள்வதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். குவிந்து கிடக்கும் குப்பைகளில் இருந்து வரும் துர்நாற்றத்தால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மூக்கை மூடிய படி அந்த வழியாக செல்கின்றனர்.

கோரிக்கை

சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிச்சித்தெரு-கொடிக்காலூர் சாலை சாலையோரத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும், சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகள், இறைச்சி கழிவுகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


Next Story