மெக்கானிக் வீட்டில் திருட்டு


மெக்கானிக் வீட்டில் திருட்டு
x

மெக்கானிக் வீட்டில் திருடிச் சென்றனர்

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டி பொன்னி தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் சேரன்மகாதேவி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அம்பையில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு சென்றார்.

ராதாகிருஷ்ணனின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் சம்பவத்தன்று நள்ளிரவில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டில் இருந்த அரை பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு, வெள்ளி அரைஞாண்கயிறு, ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story