மெக்கானிக் குத்திக்கொலை
மானாமதுரையில் மெக்கானிக் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மானாமதுரை,
மானாமதுரையில் மெக்கானிக் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடும்ப தகராறு
மானாமதுரை ஜீவா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). மெக்கானிக். இவருக்கும் அவருடைய மனைவி மலைச்செல்விக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டனர். அதன்பிறகு அவர் கடைக்கு சென்று விட்டார். இதை தொடர்ந்து நேற்று இரவு மலைச்செல்வியின் உடன்பிறந்த தம்பியான கணேசன்(38), மற்றும் மலைச்செல்வியின் சித்தி மகன் கார்த்திக் ஆகியோர் சுரேசை பார்க்க அவரது கடைக்கு வந்தனர்.
குத்திக்கொலை
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. திடீரென்று அவர்கள் சுரேசை கத்தியால் குத்தி விட்டு தப்பியதாக கூறப்படுகிறது.
இதில் அலறி துடித்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து மானாமதுரை துணை சூப்பிரண்டு கண்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகிறார்கள்.