பல் மருத்துவ உதவியாளர் பணி நேர்காணல்


பல் மருத்துவ உதவியாளர் பணி நேர்காணல்
x

தஞ்சை பல் மருத்துவ உதவியாளர் பணி நேர்காணலுக்கு 300-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்


தஞ்சை பல் மருத்துவ உதவியாளர் பணி நேர்காணலுக்கு 300-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பல் மருத்துவ உதவியாளர்

தேசிய நல்வாழ்வு குழுமம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் பல் மருத்துவ உதவியாளர் (4), பிசியோதெரபிஸ்ட் (2), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (1) ஆகிய காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஏராளமானார் விண்ணப்பித்து இருந்தனர்.அவ்வாறு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு தஞ்சை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அழைப்பு ஆணை அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி நேர்காணல் அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றவர்கள் நேற்று ஏராளமானோர் துணை இயக்குனர் அலுவலகத்தில் குவிந்தனர்.

2-வது நாளாக நேர்காணல்

ஏற்கனவே பல் மருத்துவ உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு நேற்று முன்தினமு் நேர்காணல் நடைபெற்றது. நேற்று 2-வது நாளாக நேர்காணல் நடைபெற்றது. இது தவிர பிசியோ தெரபிஸ்ட், டேட்டா என்றி ஆபரேட்டர் பணியிடங்களுக்கும் நேர்காணல் நடைபெற்றது.இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு பயின்றவர்கள் மற்றும் பிசியோ தெரபிஸ்ட் என 300-க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். இதனால் சுகாதாரப்பணிகள் துணைஇயக்குனர் அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.


Next Story