மருத்துவ முகாம்
மருத்துவ முகாம் நடைபெற்றது.
கரூர்
கரூர் அரசு கலைக்கல்லூரியில் இளம் செஞ்சிலுவை சங்கம் சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. கல்லூரியில் உள்ள ஹெல்த் சென்டர் மூலம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை சிறப்பு மருத்துவரை கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. அந்தவகையில் 2023-24-ம் கல்வியாண்டின் முதல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அலெக்சாண்டர் தொடங்கி வைத்தார்.
இதில் தோல் நோய் மருத்துவர் சீனிவாசன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச சிகிச்சை அளித்தார். முகாமில் 125 மாணவ, மாணவிகள் சிகிச்சை பெற்றனர். முகாமில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கரூர் மாவட்ட இளம் செஞ்சிலுவை சங்கம் ஒருங்கிணைப்பாளரும், இணை பேராசிரியருமான லட்சுமணசிங் செய்திருந்தார்.
Related Tags :
Next Story