மருத்துவ முகாம்
கட்டிமேடு அரசு பள்ளியில் மருத்துவ முகாம்
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வளர் இளம் பருவத்திற்கான மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு தலைமை ஆசிரியர்(பொறுப்பு) செ. முகுந்தன் தலைமை தாங்கினார். ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஆதேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினர். மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல பரிந்துரைத்தனர். இதில் மருந்தாளர்கள் தேன்மொழி, ஜெயந்தி, சித்தா பகுதி சுகாதார செவிலியர் அஞ்சம்மாள், ரத்த பரிசோதனை ஆய்வக உதவியாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story