மருத்துவ முகாம்
நாகை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
நாகப்பட்டினம்
நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் சார்பில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ - மாணவிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமினை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை 7 பேருக்கும், தனி நபர் அட்டை 11 பேருக்கும், இலவச பயண அட்டை 5 பேருக்கும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுபாஷினி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனேஸ்வரி, உள்ளடக்கிய கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி, உதவி திட்ட அலுவலர் சாந்தி, வட்டார கல்வி அலுவலர்கள் இளங்கோ, அன்பரசி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story