துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்
துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
சிவகங்கை
திருப்புவனம்,
திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி சார்பில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், வாகன ஓட்டுனர்களுக்கும் சிறப்பு பொது மருத்துவ பரிசோதனை, முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமை பேரூராட்சி மன்ற தலைவர் சேங்கைமாறன் தொடங்கி வைத்து பேசினார். முகாமில் பேரூராட்சி துணை தலைவர் ரகமத்துல்லாகான், செயல் அலுவலர் ஜெயராஜ், பேரூராட்சி மன்ற அலுவலக பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொது சிறப்பு மருத்துவ முகாமில் நடமாடும் மருத்துவ குழு டாக்டர் சங்கரலிங்கம் தலைமையில் குழுவினர் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். இந்த மருத்துவ முகாமில் 90 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story