மருத்துவ முகாம்
கோவில்பட்டியில் மருத்துவ முகாம் நடைபெற்றது
கோவில்பட்டி:
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க பொதுநல மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாம் தொடக்க விழாவிற்கு நாடார் உறவின்முறை சங்க தலைவர் எ.பி.கே.பழனிச்செல்வம் தலைமை தாங்கினார். நகரசபை துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ், நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். பொது நல மருத்துவமனை நிர்வாக குழு உறுப்பினர் ரமேஷ் வரவேற்று பேசினார். பொது மருத்துவ முகாமை ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷும், கண் பரிசோதனை முகாமை என்ஜினீயர் செந்தில்குமாரும் தொடங்கி வைத்தார்கள்.
டாக்டர்கள் அர்ச்சனா, நந்தினி, அஜய் செல்வா தலைமையில் மருத்துவ குழுவினர் ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், இருதய பரிசோதனை மற்றும் பொது மருத்துவம், கண் பரிசோதனை, கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவம் உள்ளிட்ட சிறியவர் முதல் பெரியவர்களுக்கான அனைத்து மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.
முகாமில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் காஜா முகைதீன், லேப் டெக்னீசியன்கள், பள்ளிக்குழு உறுப்பினர் ராஜா அமரேந்திரன், நாடார் மேல்நிலைப்பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் சேகர், விஜி மற்றும் முத்துமுருகன் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை செல்வி நன்றி கூறினார்.
முகாமில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை பொதுநல மருத்துவமனை நிர்வாக குழு உறுப்பினர் காமராஜ், மேலாளர் கணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.