காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்
காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருப்புவனம்,
திருப்புவனம் பகுதியில் மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி சுகாதார பணிகள் துணை இயக்குனர் வழிகாட்டுதலின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு தலைமையில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அதன்படி நடமாடும் மருத்துவ குழுவினர் மற்றும் பள்ளி சிறார்கள் நலக்குழுவினர் என இரு பிரிவுகளாக பிரிந்து திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள தட்டான்குளம், கீழடி, பூவந்தி, தேளி, மஞ்சக்குடி, மடப்புரம் மற்றும் திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 14 இடங்களில் இந்த முகாம் நடந்தது.
இந்த முகாமில் 615 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 68 நபர்களுக்கு சாதாரண இருமல், சளி எனவும் 19 நபர்களுக்கு காய்ச்சலும், கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது.