சிறப்பு மருத்துவ முகாம்
சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருப்புவனம்,
திருப்புவனம் யூனியனை சேர்ந்த கழுகேர்கடை ஊராட்சி பெருமாள்புரம் காலனி பகுதியில் தமிழக அரசின் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் விஜய்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் முன்னிலை வகித்தார். முகாமில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் நோயாளிகளுக்கு இலவச மருந்து பெட்டகங்களை வழங்கினார்.
சிறப்பு மருத்துவ முகாமில் யூனியன் துணை சேர்மன் மூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு, யூனியன் ஆணையாளர் அங்கயற்கன்னி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் தஸ்லீம், ஈஸ்வரன், ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, பேரூராட்சி துணைத்தலைவர் ரகமத்துல்லாகான், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் ஆய்வக பரிசோதனை 386 பேருக்கும், ஸ்கேன் பரிசோதனை 32 பேருக்கும், இ.ஜி.சி. பரிசோதனை 58 பேருக்கும் என மொத்தம் 994 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.