மருத்துவ முகாம்


மருத்துவ முகாம்
x

பூலாங்கால் கிராமத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

விருதுநகர்

திருச்சுழி,

திருச்சுழி அருகே பூலாங்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பூலாங்கால் கிராமத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை பூலாங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் அஜ்ரன் ஜெமிலா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கால்நடை உதவி மருத்துவர் இளஞ்செழியன், கால்நடை ஆய்வாளர் ஈஸ்வரி திலகம் ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றும் கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story