மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

சிவகங்கை

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) எஸ்.புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதில் பொது மருத்துவம், தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், உதவித்தொகைக்கான பதிவு, மனநல, எலும்பு மூட்டு, காது, மூக்கு, தொண்டை, கண் மருத்துவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் கலந்து கொள்ள வருபவர்கள் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை 2 கலர் நகல், ஆதார் அட்டை 2 கலர் நகல், ரேஷன் கார்டு 2 கலர் நகல், பாஸ்போர்ட் அளவு 4 புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம் 2 கலர் நகல் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு மற்றும் போக்குவரத்து பயணப்படி வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story