இலவச சிறப்பு மருத்துவ முகாம்


இலவச சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

கீழக்கரை,

ராமநாதபுரம் தெற்கு மாவட்டம் ஏர்வாடி கிளை த.மு.மு.க., ம.ம.க, சார்பாக மனிதநேய மக்கள் கட்சியின் 15-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். த.மு.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.சலிமுல்லாஹ்கான், த.மு.மு.க. தலைமை பிரதிநிதி சம்சுதீன் சேட், மாநில செயற்குழு உறுப்பினர் முகம்மது முஹிதுல்லா, தி.மு.க. முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, ஏர்வாடி முன்னாள் ஊராட்சி தலைவர் முகம்மது அலி ஜின்னா, ஏர்வாடி ஊராட்சி தலைவர் செய்யது அப்பாஸ், ம.ம.க. மாவட்ட செயலாளர் நஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தலைமை தாங்கினர். த.மு.மு.க, ம.ம.க, மாவட்ட தலைவர் வாவாராவுத்தர், மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தனர்.இதில், த.மு.மு.க. மருத்துவ சேவை அணி செயலாளர் ராஜா, சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் முகம்மது யாக்கூப், நுகர்வோர் பாதுகாப்பு பணி மாவட்ட செயலாளர் உஸ்மான் அலி, ஏர்வாடி கிளை தலைவர் நுஸ்ரதுல்லா, த.மு.மு.க. கிளை செயலாளர் முகமது உசேன், ம.ம.க. கிளை செயலாளர் நபில் அஹமது, கிளைநிர்வாகிகள் மாமுது, சாகுல், ராஜா, கமர்தீன், தமீம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


Related Tags :
Next Story