மருத்துவ முகாம்


மருத்துவ முகாம்
x

மருத்துவ முகாம் நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரத்தில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு தலைவலி, கண்ணில் நீர் வடிதல், தூரப்பார்வை, கிட்ட பார்வை, கண்புரை நோய் போன்ற கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்து அதற்குரிய மருந்து மாத்திரைகளை வழங்கினார்கள். மேலும் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அதேபோல் பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு, உடல் பரிசோதனை செய்தனர். முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை செய்தவர்களுக்கு உரிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில் புன்னம்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story