மருத்துவ முகாம்


மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பத்து ஊராட்சியில் மருத்துவ முகாம்

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

தலைஞாயிறு ஒன்றியம் கோவில்பத்து ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில், மருத்துவ முகாம் நடந்தது. முகாமில், 300-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமை நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரதிவிராஜ், சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் ஜோஸ்பின்அமுதா, நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், துணை மேலாளர் தியாகராஜன், தரக்கட்டுபாடு மேலாளர் ராமகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் அசோகன், சுகாதார மேற்பார்வையாளர் செல்வம் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story